தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

''மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படத்தை எடுத்தேன்''- இயக்குநர் மிஷ்கின்

மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படம் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின், சைக்கோ படம் குறித்து மனம்திறந்து பேசினார்.

''மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படத்தை எடுத்தேன்''- இயக்குநர் மிஷ்கின்
''மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படத்தை எடுத்தேன்''- இயக்குநர் மிஷ்கின்

By

Published : Feb 1, 2020, 1:17 PM IST

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், மிஷ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், 'சைக்கோ பட வெற்றியை இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கிறேன். செந்தூரப் பூவே, நிழல்கள் போன்ற படங்களால் தான் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. என்னுடைய தாயாகவும் தந்தையாகவும் இளையராஜவை நினைக்கிறேன். என் தாய் வயிற்றில் பிறந்த மற்றொரு தம்பியாகவே உதயநிதியை பார்க்கிறேன்.

''மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படத்தை எடுத்தேன்''- இயக்குநர் மிஷ்கின்

என்னை விட என் படங்களை அவர் அதிகம் நேசித்தார். அவர் ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும், படப்பிடிப்பில் உதய் என்று தான் அவரை அழைப்பேன். நித்யா மேனன் எனக்கு தங்கை போல். என்னை முழுவதுமாக புரிந்து கொண்ட நடிகை அவர். சைக்கோ படத்தை மலை, மழை மீது நம்பிக்கை வைத்து தான் எடுத்தேன். படத்தில் 3000 அடி உயரத்தில் இருந்து விழும் காட்சியெல்லாம் உண்மையாக எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள், சிறந்த கதையோ படமோ இல்லை. ஒருவகையான முயற்சி தான் இது. அதில் சில தவறுகள் இருப்பது இயல்பு தான். சைக்கோ திரைப்படம் வன்மமாக தோன்றினாலும், அன்பைத் தான் நான் கூறியிருக்கிறேன்'. இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

இதையும் படிங்க: 'மிஷ்கின் என்னைக் குழந்தைப்போல பார்த்துக் கொண்டார்' - நித்யா மேனன்

ABOUT THE AUTHOR

...view details