தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பொண்ண தொட்டா சாவுதான்...' - வெளியானது தேவராட்டம் டிரைலர்

கெளதம் கார்த்தி நடித்துள்ள தேவராட்டம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

By

Published : Apr 22, 2019, 2:33 PM IST

தேவராட்டம் டிரைலர்

கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா தற்போது கெளதம் கார்த்தி நடிக்கும் தேவராட்டம் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, பெப்சி விஜயன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கிராமங்களில் நடக்கும் வன்முறைகளை தனக்கேத்த பாணியில் சொல்லக் கூடியவர் இயக்குநர் முத்தையா. அதேபோன்று தேவராட்டம் படத்திலும் தப்பை தட்டிக் கேட்கும் நாயகனாக கெளதம் கார்த்தி நடித்துள்ளார்.

தனது வழக்கமான பாணியில் ரவுடியாக வரும் கதாநாயகன் மதுரையில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கிறார். சாதாரண ரவுடியாக இல்லாமல், மதுரையை ஆட்டிப்படைக்கும் பெரிய தாதா பெப்சி விஜயனையே எதிர்த்து கெளதம் கார்த்தி சண்டை போடுகிறார். படத்தில் கெளதம் கார்த்தி அடித்தால் அடியாட்கள் பத்தடி பாய்ந்து விழுகின்றனர். அவர் உதைக்கும் உதையில் கரன்ட் கம்பி சாக்கடிக்கிறது. இதுதான் முத்தையாவின் ஹீரோக்களின் ஸ்டைல். டிரைலரின் கடைசி வசனம் "மண்ணை எடுத்தா விட்டுருவேன்... பொண்ணை தொட்டா எப்படி விட முடியும்" என பேசிக்கொண்டே கெளதம் கார்த்தி கண்களாலேயே மிரட்டுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details