கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘D 43'. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்திருந்த நிலையில், தனுஷ் தனது ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் அந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்திற்கான பணிகளில் இணைந்தார்.
ஜூலை 1ஆம் தேதி ஹைதராபாத் வந்த தனுஷ், இப்பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனனும் தனது போர்ஷனை முடிப்பதற்காக ஹைதராபாத் வந்துள்ளார். ஜூலை 15ஆம் தேதி வரை அவர் இங்கு இருப்பார் என கூறப்படுகிறது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் தனது கடைசிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.