தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் நல்ல 'மாஸ்டர்' - புகழாரம் சூட்டிய 'சின்ன தல'

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை தனது மகளுடன் ரசித்துப் பார்த்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'சின்ன தல' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

master
master

By

Published : Jul 20, 2021, 5:11 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) ஐந்தாவது சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஜூலை 19) இரவு தொடங்கியது. இப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டிக்கு இடையில், 'மிஸ்டர் ஐபிஎல்' சுரேஷ் ரெய்னா லைவ்வில் வந்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. சென்னை பண்பாடு குறித்தும், தமிழ்த் திரைப்படம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சுரேஷ் ரெய்னா, இந்தி டப்பிங்கில் மாஸ்டர் படத்தை என் மகளுடன் ரசித்துப் பார்த்தேன். விஜய் நல்ல நடிகர். அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது என்றார். அதுமட்டுமல்லாது தமிழில் தனக்குப் பிடித்த பாடலான 'முன்பே வா என் அன்பே வா' பாடலைப் பாடிக்காட்டியதோடு சூர்யா எனது ஃபேவரைட் நடிகர் என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே சுரேஷ் ரெய்னா எனது பயோபிக் படமாக எடுக்கப்பட்டால் அதில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: என் பயோபிக்கில் யார் நடிக்கணும்: விருப்பத்தை வெளிப்படுத்திய 'சின்னதல'

ABOUT THE AUTHOR

...view details