தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 14, 2020, 4:49 PM IST

ETV Bharat / sitara

'தோர்' கதாபாத்திரத்திலிருந்து விலகுவதாக இல்லை - கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

'தோர்' கதாபாத்திரத்திலிருந்து விலகுவதாக பரவிய தகவல்களுக்கு கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்  முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்
கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

அமெரிக்காவின் பிரபல மார்வல் நிறுவனத்தின் காமிக் புத்தகங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்நிறுவனம் 'கேப்டன் அமெரிக்கா', 'ஹல்க்' போன்ற கதாபாத்திரங்களை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. பிற்காலத்தில் அந்நிறுவனத்தில் மார்வல் ஸ்டுடியோஸ் மூலம் சூப்பர் ஹீரோ அனிமேஷன் படங்களைத் தயார் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் படத்தயாரிப்பதிலும் ஈடுபட தொடங்கி தங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை திரைப்படமாக எடுக்கவும் தொடங்கியதோடு, சூப்பர் ஹீரோ படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துவருகின்றனர்.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஸ்பைடர் மேன்', 'பென்டாஸ்டிக் ஃபோர்', 'அயர்ன் மேன்', 'தி இன்கிரெடிபில் ஹல்க்', 'தோர்', 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

மூன்று கட்டங்களாக இந்நிறுவனம் மொத்தம் 23 படங்களை வெளியிட்டுள்ளது. இதில் இறுதியாக 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசிப் படம். இப்படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்தது. தற்போது மார்வெல் சினிமா நான்காம் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளது.

தோர் படத்தின் நான்காம் பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இப்படத்தை 'தோர் ரக்னராக்' இயக்கிய டைகா வைடிடி இயக்குகிறார்.

'தோர்: லவ் அண்ட் தண்டர்' படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டெஸ்ஸா தாம்சஸன் வால்கைரீ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தோர் காதலியாக முதல் இரண்டு தோர் பட சீரிஸில் தோன்றிய நடாலி போர்ட்மேன் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இப் படத்தோடு தோர் கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக தகவல்கள் பரவியது.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தத் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியிருப்பதாவது, "தோர் கதாபாத்திரத்திற்கு வெறும் 1,500 வயதுதான் ஆகிறது. நிச்சயமாக நான் படத்தோடு இந்தக் கதாபாத்திரத்தை விட்டு விலகப்போவதில்லை. அப்படி ஒன்றும் நடக்காது என நான் நம்புகிறேன். இப்படத்தின் கதையை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படத்தில் நிறைய காதலும் மின்னல்களும் இருக்கும்.

'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்துக்குப் பிறகும் நான் மார்வல் உலகத்தில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details