தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2020, 7:41 PM IST

ETV Bharat / sitara

'கேப்டன் மார்வெல்' இரண்டாம் பாகம் பணிகள் தீவிரம்!

பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ கதையை டைட்டில் கேரக்டராக வைத்து வெளியான 'கேப்டன் மார்வெல்' வசூல் வேட்டை நிகழ்த்திய நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

Captain Marvel sequel
Actress Brie Larson in Captain Marvel

லாஸ் ஏஞ்சல்ஸ்: புதிய சாகசங்களுடன் 'கேப்டன் மார்வெல்' இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் டிஸ்னி மற்றும் மார்வெல் நிறுவனம் இறங்கியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் பெண் கேரக்டரை மையமாக வைத்து வெளியான படம் 'கேப்டன் மார்வெல்'. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று, 1.13 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

இந்த படத்தில் கரோல் டான்வர்ஸ் என்ற கற்பனையான சூப்பர் ஹீரோ கேரக்டரில் ’ப்ரி லார்சன்’ நடித்திருந்தார். இந்த கேரக்டர் மூலம் சூப்பர் ஹீரோ உலகில் அதிரடியாக இறங்கியிருக்கும் இவர், ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தார்.

பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ கதையை டைட்டில் கேரக்டராக வைத்து மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் ஹாலிவுட் திரையுலகில் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்தது. இதன் பலனாக நல்ல வசூலையும் ஈட்டியதுடன், மற்ற சூப்பர் ஹீரோ படங்களைப் போல் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து 'கேப்டன் மார்வெல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் டிஸ்னி மற்றும் மார்வெல் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்த பாகத்தில் சாமுவேல் எல் ஜாக்சன், பென் மெண்டெல்சோன், டிஜிமோன் ஹவுன்சோ, லீ பேஸ், ஜுட் லா, கிளார்க் கிரெக், லஷனா லிஞ்ச், ஜெம்மா சான், அன்னெட் பெனிங் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். அன்னா போடன் மற்றும் ரயான் ஃபிளெக் ஆகியோர் படத்தை இயக்கவுள்ளனர்.

'கேப்டன் மார்வெல்' படத்தில் டைட்டில் கேரக்டரில் கலக்கிய ப்ரி லார்சன், 'அவெஞ்சர்: எண்ட்கேம்' படத்திலும் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details