1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்ற சல்மான் கான், சயிஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். பிளாக்பக் (Blackbuck ) என்னும் அரியவகை மான் இனத்தைச் சேர்ந்த இரண்டு மான்களை வேட்டையாடியதாக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
நீண்டகாலமாக நிலுவையில் கிடந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வெளியானது. அதில் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றஞ்சுமத்தப்பட்ட சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான் பிணையில் வெளியே வந்தார்.
பிணையில் வெளியே வந்த சல்மான் கான், தனது தண்டனைக்கு எதிராக ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் சல்மான் வேட்டையாடிய அரியவகை மானை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்னும் பிரபல கேங்ஸ்டரிடமிருந்து சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.