’பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி தொடங்கி 60 நாள்கள் கடந்துள்ளன. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியிலிருந்து வேல்முருகன், ரேகா, சுசித்ரா, சுரேஷ் சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த வாரம் ஷிவானி, அனிதா, ஆரி, ஆஜித், ரம்யா, நிஷா, ஷிவானி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அனிதா சம்பத் வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியானது.
அதற்கு ஏற்றார்போல் அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டு, உன்னைக் காண காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு ஒரு காலண்டரில் இன்னும் மூன்று நாள்கள்தான் இருப்பதுபோல் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக்கண்ட ரசிகர்கள், உடனே அனிதா இந்த வாரம் வெளியேறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
அனிதா கணவர் வெளியிட்ட பதிவால் நேர்ந்த குழப்பம் இதற்கு மறுப்புத் தெரிவித்து மீண்டும் அனிதாவின் கணவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “மக்கா நான் அனிதாவை மிஸ் செய்வதாகத்தான் பதிவிட்டேன். எலிமினேஷனானு இப்போ தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:”மனிதம் குறித்து இந்தக் கதாபாத்திரங்களால் நிறைய கற்றுள்ளேன்” - ராணி முகர்ஜி