தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர்கள் சிலர் திரைப்படமாக்க முயன்று வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன், ஜெயலலிதா பற்றி இணைய தொடர்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தலைவி' ஜெயலலிதா பயோபிக்: என்ன கேரக்டரா இருக்கும் அரவிந்த் சாமிக்கு?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஏ.எல். விஜய் 'தலைவி' என்ற பெயரில் படத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார். இதற்காக தமிழ் மொழி உச்சரிப்புப் பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டிய பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் நடிக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அந்தக் கதாபாத்திரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.