தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீங்கள் கொடுத்த ஊக்கத்தை என்னால் மறக்க முடியாது - உருகிய ஏ.ஆர் ரஹ்மான்

அன்புடன் செய்யும் எந்த ஒரு விஷயமும் வாழ்நாள் வரை நிலைத்திருக்கும். நீங்கள் என் குழந்தைப் பருவத்தில் எனக்கு கொடுத்த ஊக்கத்தையும், அன்பையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. உங்கள் எண்ணற்ற மெலோடி பாடல்கள் மூலமாக உங்கள் பெயர் இந்த உலகத்தில் எப்போதும் இருக்கும் என ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rahman
Rahman

By

Published : Apr 7, 2020, 12:21 PM IST

Updated : Apr 7, 2020, 8:21 PM IST

மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இசையமைப்பாளராக பணியாற்றிய எம்.கே. அர்ஜூனன் உடல் நலக்குறைவால் நேற்று (ஏப்.7) கொச்சி பல்லூருத்தி பகுதியில் வசிக்கும் தனது வீட்டில் காலமானார். அர்ஜூனன் மாஸ்டர் என மலையாள சினிமாத் துறையினர் இவரை அழைப்பதுண்டு. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1981 ஆம் ஆண்டு ஏ.பி ராஜ் இயக்கத்தில் வெளியான 'அடிமா சங்கலா' (Adima Changala) என்னும் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய அர்ஜூனன் அப்படத்தில் முதன் முதலாக ஏ.ஆர் ரஹ்மானுக்கு கீ போர்டு வாசிக்க வாய்ப்பு அளித்துள்ளார். இப்படத்தில் பிரேம் நசீர், ஷீலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புடன் செய்யும் எந்த ஒரு விஷயமும் வாழ்நாள்வரை நிலைத்திருக்கும். நீங்கள் என் குழந்தைப் பருவத்தில் எனக்கு கொடுத்த ஊக்கத்தையும், அன்பையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. உங்கள் எண்ணற்ற மெலோடி பாடல்கள் மூலமாக உங்கள் பெயர் இந்த உலகத்தில் எப்போதும் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் எம்.கே ஆர்ஜூனன் மாஸ்டர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதனுடன் குழந்தைப்பருவத்தில் அர்ஜூனன் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Last Updated : Apr 7, 2020, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details