தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கயல் ஆனந்தி நடிக்கும் 'நதி'

சென்னை: உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'நதி' படத்தில் 'கயல்' ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

By

Published : Feb 17, 2021, 12:28 PM IST

Anandhi
Anandhi

'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்த சாம் ஜோன்ஸ் அதனைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் படம் 'நதி'.

இப்படத்தில் நாயகனாக சாம் ஜோன்ஸ் நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனமான 'மாஸ் சினிமாஸ்' சார்பில் தயாரிக்கிறார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'நதி' திரைப்படத்தில் 'கயல்' ஆனந்தி நாயகியாக நடிக்கிறார். இவருடன் தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு 'கனா' பட இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். நதி படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான 'கயல்' ஆனந்தி!

ABOUT THE AUTHOR

...view details