வீட்டிலிருந்தபடியே படிகளைத் தாண்டி உடற்பயிற்சி செய்யும் முறையை வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
கருப்பு நிற டாப்ஸ், அரை டவுசர் என உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு ஆடை அணிந்து, வீட்டிலிருக்கும் படிகளை தாண்டி, குதித்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் எமிஜாக்சன்.
அதில், "வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் முறை" என்று #STAYHOME #quarantine #homeworkout ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், "உட்கார்ந்து எழும் முறை, தவளைப் போல் மேலே எழும்புவது போன்று பயிற்சி முறைகளை எவ்வளவு செய்யவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ள அவர், இதைச் செய்வதற்கு படிக்கட்டுகளை தேவை என்பது அவசியம் இல்லை எனவும், தரையில் வைத்து சின்ன சின்ன மாற்றங்களோடு செய்யலாம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, "உடற்பயிற்சி செய்ய முடியாது என்று யாரும் சாக்கு சொல்ல வேண்டாம்" எனவும் கூறியுள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் டாய்லெட் பேப்பரை வைத்து உடற்பயிற்சி மேற்கொள்வது பற்றி விளக்கி வீடியோ வெளியிட்டார் எமி. இதில், தனது குழந்தை ஆண்டிராஸை அருகே வாக்கரில் அமர வைத்துவிட்டு டாய்லெட் பேப்பரை வைத்து விதவிதமாக பயிற்சி மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது படிக்கட்டுகள் மீது ஏறி இறங்கி, உட்கார்ந்து எழுந்து என அடுத்த அடுத்த பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
காதல், கர்ப்பம், திருமண நிச்சயதார்த்தம், குழந்தை என எமியின் கடந்த ஆண்டு கடந்த நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே உள்ளார். திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தியிருக்கும் எமி ஜாக்சன், தனது கவர்ச்சிகரமிக்க கட்டுக்கோப்பான உடலை பேணிக்காப்பதற்கு உடற்பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: டாய்லெட் பேப்பர் வைத்து மகனுடன் உடற்பயற்சி செய்த எமி ஜாக்சன்