பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த '2.O' படத்தில் பக்ஷி ராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவர் பாலிவுட்டில் சமூக அக்கறையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். உதாரணமாக 'ஸ்பெஷல் 26', 'பேடு மேன்' (pad man) உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.
இந்நிலையில் அக்ஷய் குமாரின் ரசிகரான பர்பாட் அவரை காண்பதற்காக குஜராத் துவாரகாவில் இருந்து மும்பை வரை 900 கி.மீ, 18 நாட்கள் நடந்து வந்துள்ளார். இறுதியில் அவர் அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார்.
மேலும், அவருடன் அக்ஷய் குமார் செல்ஃபி எடுத்ததுடன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்பையும் மதிக்கிறேன்.
ஆனால் இதுபோன்ற காரியத்தில் இனி யாரும் ஈடுபடாதீர்கள். உங்களது ஆற்றலையும் நேரத்தையும் உங்கள் வாழ்க்கையை கட்டமைப்பதில் செலவிடுங்கள். அது என்னை மகிழ்விக்கும். உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள் பர்பாட் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.