இந்தியில் பிரமாண்டப் பொருட்செலவில் நடிகர் அஜய் தேவ்கன், கஜோல், சைஃப் அலி கான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'தனஜி - த அன்சங் வாரியர்'.
இது அஜய்யின் நூறாவது படமென்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் தன் காதல் மனைவி கஜோலுடனே அஜய் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.