தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புள்ளிங்கோ' கெட்டப்பில் அசத்தும் ரம்யா பாண்டியன்!

மொட்டை மாடி போட்டோ சூட்டில் ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா பாண்டியனின், ’புள்ளிங்கோ’ கெட்டப்பிற்கு மாறியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

By

Published : Oct 8, 2019, 10:04 AM IST

ramya pandian

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சமீபத்தில், மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட இவரது போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஹாட்டான புகைப்படங்கள்தான் சென்சேஷன் ஆனது. ரம்யா பாண்டியனை பற்றித்தான் ஒருவாரத்திற்கு இளைஞர்கள் பேசித் தீர்த்தனர்.

ரம்யா பாண்டியனின் புள்ளிங்கோ கெட்டப்

இதையடுத்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. இந்நிலையில், ரம்யா பாண்டியன் 'புள்ளிங்கோ' கெட்டப்பிற்கு மாறியிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. கிராப் கட்டிங் போல் இருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் புகைப்படத்தில் இருப்பது ரம்யா பாண்டியன்தானா என்று வியக்கின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரம்யா பாண்டியன், புள்ளிங்கோ கெட்டப்பிற்காக முடியை குறைக்கவில்லை; அது வெறும் ’விக்’தான் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details