புருவத்தை சுருக்கியும், கண்ணடித்து காண்பித்தும் ஒரேநாளில் பிரபலமானவர் மலையாள நடிகை பிரியா வாரியர். ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்திற்கு பிறகு பிரியா வாரியர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான் - புருவஅழகி விளக்கம் - பிரியா வாரியர் புதிய திரைப்படங்கள்
நடிகை பிரியா வாரியர், தான் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையில் அவர் கடந்த இரண்டு வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்துள்ளார். திடீரென்று சமூக வலைதளங்களில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், பிரியா வாரியர் தான் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினேன் என்பது குறித்து வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில், "என் மீது அக்கறை காட்டும் எனது ரசிகர்களுக்கு மிக்க நன்றி. மன ஆரோக்கியம், அமைதிக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறினேன். லைக்ஸ், ஃபாலோயர்கள் குறித்த மன அழுத்தம் இல்லாமல், கடந்த இரண்டு வாரமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.