நடிகர் விஜய்யுடன் இணைந்து ஹன்சிகா வேலாயுதம், புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹன்சிகா கைவசம் 'மஹா' திரைப்படம் மட்டும் உள்ளது. ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவந்த இவர், தற்போது பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்துவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், "விஜய் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்லுங்கள்" என்று கேட்டார்.