கேரளாவில் 2017ஆம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை காவல் துறையினர் கைது செய்தனர். சுனில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தன் மீதான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நடிகர் திலீப்!
மலையாள நடிகர் திலீப் தன் மீதான வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அவரை கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். 85 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு திலீப் பிணையில் வெளியே வந்தார். பின் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிபதிகள் இவரது மனுவை நிராகரித்தனர்.
இந்நிலையில் திலீப் தனது வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனமீண்டும்மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் இவரது வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் தற்போது திலீப் மனு தாக்கல் செய்திருப்பது விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபடுவதாக கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.