தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும், காக்கா முட்டை, நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நவலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இன்று (ஜூலை30) அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தியை அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.