சென்னை: சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வெள்ளை யானை' படத்தின் சிங்கிள் டிராக் பாடலை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
திருடா திருடி, யோகி, சீடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வெள்ளை யானை'. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு , நடிகைகள் ஆத்மியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் விவசாயியாக தோன்றுகிறாராம் சமுத்திரகனி.
முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளை மையமாகக்கொண்டு தயாராகியுள்ள படத்துக்கு பாடலாசிரியர் உமா தேவி எழுதியிருக்கும் பாடலை பின்னணி பாடகர்கள் விஜய் நரேன் - சங்கீதா கருப்பையா ஆகியோர் பாடியுள்ளனர். வெண்ணிலா என்று தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .