ஹைதராபாத்: சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் அஸ்வின் ககுமனு. இவர் சென்னையில் 1987ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்தார்.
இவர் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அஸ்வின் நடிப்பில் வெளியான மேகா, இவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுக்கொடுத்தது. திகில், காதல் என நகர்ந்த இந்தப் படத்தில் அஸ்வின் போலீஸ் அலுவலராக நடித்திருந்தார். காதல், ரொமாண்டிக் காட்சிகளிலும் பின்னி எடுத்திருப்பார்.
அஸ்வின்
மும்பை வரவான சிருஷ்டி டாங்கே, அஸ்வின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. பின்னணி இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டு படத்தை வாழ வைத்திருப்பார் இளையராஜா.
நடிப்பின் மீது பெரிதும் ஆர்வம் கொண்ட அஸ்வின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் நடித்திருந்தார்.
மங்காத்தா கணேஷ்
தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடுநிசி நாய்கள், மங்காத்தா, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்கள் வெளியாகின. 2012ஆம் ஆண்டு இவரது நடிப்பில் தமிழ் படம் வெளியாகிவில்லை. அப்போது ஏக் திவானா தா (Ekk Deewana Tha) படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் பாலகிருஷ்ணனாகவும், பிரியாணி படத்தில் அஸ்வினாகவும் தோன்றினார். இதையடுத்து மேகா (முகிலன்), வேதாளம் (அர்ஜூன்), ஸீரோ (பாலா), திரி (ஜீவா), நீர்த்திரை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பொன்னியின் செல்வன்
இதற்கிடையில் 2020ஆம் ஆண்டு வெளியான நாங்க ரொம்ப பிஸி என்ற சின்னத்திரை தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிட்ட காதலு (Pitta Kathalu) என்ற தெலுங்கு இணைய தொடரில் தோன்றினார். இவரின் நடிப்பில் இது வேதாளம் சொல்லும் கதை, தொல்லைக்காட்சி, பிட்சா 3- தி மம்மி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
புதிய தோற்றத்தில் அஸ்வின் இது தவிர அஸ்வின் நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், லைவ் டெலிகாஸ்ட் உள்ளிட்ட இணைய தொடர்கள் (வெப் ஸீரிஸ்) வெளியாகியுள்ளன. தொல்லைக்காட்சி காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகிவருகிறது. சாதிக் கான் படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க : 5 ஸ்டார் நாயகி நடிகை கனிகா!