இது குறித்து நடிகர் ஆரி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நம்மை ஏன் வீட்டிலேயே முடங்கி கிடக்குமாறு கூறுகிறார்கள் என்று பலருக்கு கேள்வி எழுகிறது. இதில், நான் வெளிநாட்டுக்கோ, வெளிமாநிலத்துக்கோ செல்லவில்லை என்று சிலரும், நான் ஒரு அன்றாடகாட்சி. எனவே வேலை செய்தால்தான் பொழப்பு என்று சிலரும் கூறி வருகிறார்கள்.
இந்த 21 நாளுக்கு அப்புறம் நம் வாழ்க்கையை எந்த ஒரு பிரச்னை இல்லாமல் தொடர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இதைக் கொடுத்துள்ளார்கள். அதேபோல் இந்த 21 நாட்களில் இந்த வைரஸை எப்படி கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது.
அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கரோனா நான்கு வகையில் பிரிக்கப்படுகிறது. முதலாவது ஏ குரூப். வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களின் பயணக்குறிப்புகளை கண்காணித்து சிகிச்சை அளிப்பது.
இரண்டாவதாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார்கள் என்பதை கண்காணிக்க முடியாத வகையாக பி குரூப் உள்ளது.
கரோனா அறிகுறி என்பது 16 நாட்களுக்குப் பிறகுதான் நமக்கு தெரியவரும் எனச் சொல்லப்படுகிறது. அது இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மூலம் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படும் வரை தங்களுக்கு பாதிப்பு இல்லை என்றே அவர்களுக்கு தோன்றும். எனவே இந்த பி குரூப் மிகவும் ஆபத்தானது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரையெல்லாம் பார்த்தார், பேசினார் என்பதை கண்டறிந்து அவர்களில் யாரெனும் பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை அளிப்பதுதான் சி குரூப்.
யாருக்கும் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று அரசாங்கம் சொல்லும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வீட்டிலேயே இருப்பவர்கள் டி குரூப். இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது, பி குரூப் நபர்களால் பரப்பப்பட்டு பாதிப்படைவார்கள்.