தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கல்வியில் சமரசம் செய்தால் எதிர்காலம் கேள்விக்குறி' - டாப்ஸி

மும்பை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டதற்கு நடிகை டாப்ஸி பானு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாப்ஸி பன்னு
டாப்ஸி பன்னு

By

Published : Jul 9, 2020, 4:01 PM IST

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையுள்ள 2020-21ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய பாடப்பிரிவுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.

மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகியப் பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர் பணமதிப்பிழப்பு ஆகிய பாடப்பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இயின் இந்த முடிவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை டாப்ஸி, தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

டாப்ஸி ட்வீட்
அதில், 'ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நான் தவறவிட்டுவிட்டேனோ? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்தில் நமக்குத் தேவைப்படாதா? கல்வியில் சமரசம் செய்தால் நம் எதிர்காலம் கேள்விக்குறி தான்' என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details