தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 1:15 PM IST

ETV Bharat / sitara

மருத்துவர்களுக்குத் தொடர்ந்து பிபிஇ கிட் வழங்கிவரும் ரஜினி பட நாயகியின் ரசிகர்கள்!

கரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு பிபிஇ கிட் வழங்கிய தனது ரசிகர்களுக்கு சோனாக்‌ஷி சின்ஹா நன்றி தெரிவித்துள்ளார்.

sonakshi
sonakshi

பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் சோனாக்‌ஷி சின்ஹா வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஹிட்டான 'காக்க காக்க' படத்தின் ரீமேக்காக இந்தியில் ஜான் ஆபிரகாம் - ஜெனிலியா நடிப்பில் 2011இல் வெளிவந்த படம் 'ஃபோர்ஸ்'. இந்தப் படம் சூப்பர் ஹிட்டான நிலையில், இதன் இரண்டாம் பாகமாக 2016ஆம் ஆண்டு 'ஃபோர்ஸ் 2' வெளியானது.

இதில், ஹீரோயினாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருந்தார். படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு இணையாக அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை வெளுத்து வாங்கி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதன்பின் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் நடித்திருந்தார். இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது இவர் கூறும் கருத்துகள் விவாதப் பொருளாகும்.

இன்ஸ்டாவில் பதிவிட்ட சோனாக்‌ஷி சின்ஹா

தற்போது சோனாக்‌ஷி சின்ஹாவின் ரசிகர்கள் மும்பையில் உள்ள கே.ஜே. சோமையா மருத்துவமனைக்கு பிபிஇ கிட்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ரசிகர்களின் இந்தச் செயலுக்கு சோனாக்‌ஷி நன்றியையும் பாராட்டையும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

பிபிஇ கிட் அடங்கிய பெட்டிகளின் புகைப்படத்தோடு அவர் இன்ஸ்டாகிராமலில் வெளியிட்டுள்ள பதிவில், "சோனாக்‌ஷி சின்ஹா ரசிகர்களின் நன்கொடை. இன்று கே.ஜே. சோமையா மருத்துவமனைக்கு அதிக கிட்கள் வழங்கப்பட உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்ஸ்டாவில் பதிவிட்ட சோனாக்‌ஷி சின்ஹா

இதற்கு முன்பு சோனாக்‌ஷி ரசிகர்கள் புனேவின் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்கு பிபிஇ கிட்களை வழங்கியிருந்தனர். அப்போது ட்வீட் செய்த சோனாக்‌ஷி, ”நீங்கள் எல்லோரும் அன்பானவர்கள், உங்களது தாராள மனப்பான்மைக்கு நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details