மனநிலையை காக்க ட்விட்டரிலிருந்து வெளியேறிய சோனாக்ஷி
மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது மனநிலையை காப்பதற்காக ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்லார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலே காரணம் என சமூகவலைதள பக்கத்தில் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதுமட்டுமல்லாது சமூக வலைதள பக்கங்களில் இருக்கும் வாரிசு நடிகர் நடிகைகளின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.
இதனையடுத்து நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா தற்போது தனது ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார். கடைசியாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், நமது மன நலனை காக்க முதல்படியே எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான்.