தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 7, 2020, 3:44 AM IST

ETV Bharat / sitara

'மதுவுக்கு எதிரான பரப்புரையில் உந்துதலாக இருந்தவர் சுனில் தத்'

மறைந்த நடிகர் சுனில் தத்தின் 91ஆம் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்த மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா, “மதுவுக்கு எதிராக பரப்புரையில் தனக்கு உத்வேகம் ஊட்டியவர்” என்று குறிப்பிட்டார்.

Shatrughan Sinha remembers Sunil Dutt on birth anniversary
Shatrughan Sinha remembers Sunil Dutt on birth anniversary

மறைந்த நடிகர் சுனில் தத்தின் 91ஆவது பிறந்தநாளை (ஜூன்6) முன்னிட்டு திரைப்பிரபலங்கள் அவரை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் செய்தனர்.

இந்நிலையில் மூத்த நடிகரான சத்ருகன் சின்ஹா, சுனில் தத்தை நினைவுகூர்ந்து வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், 'மறைந்த மாபெரும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், ஜென்டில்மேன், அரசியல்வாதியும் ஒரு சிறந்த மனிதனுமான சுனில் தத்துக்கு எனது அஞ்சலி, பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன்' என தெரிவித்திருந்தார்.

'அவரிடமிருந்து பலரும் பலவற்றை கற்றுக்கொண்டனர். அவர், எனது மது மற்றும் புகையிலைக்கு எதிரான பரப்புரையில் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்தார். எனது சமூகம் அரசியல் வாழ்க்கையிலும் அவர் பெரும் உந்துதலாக இருந்தார். அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்நன்நாளில் அவரின் குடும்பத்துக்கு எனது அன்புகள்' என்றும் சத்ருகன் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details