கரோனா தொற்று அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சில நிபந்தனைகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்பு நடத்தவும், அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன.
தமிழில் அர்ஜுன் ஜோடியாக 'சாது' படத்திலும், கமல்ஹாசன் ஜோடியாக 'ஆளவந்தான்' படத்திலும் நடித்தவர் ரவீனா டண்டன்.
தற்போது கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான 'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையில் ரவீனா டண்டன் தனது வீட்டிலேயே விளம்பர படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராமில் இந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "அரசுக்கூறிய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகள், குறைந்தபட்ச குழு உறுப்பினர்களுடனும் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது
பணிபுரியும் சூழ்நிலை மாறிவிட்டது. நாம் சொல்வது போல் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று. இந்த படப்பிடிப்புக்காக எனது வீட்டில் இரண்டு பேரை மட்டும் அனுமதித்து இருந்தேன். ஒருவர் ஒளிப்பதிவாளர், மற்றொருவர் சவுண்ட் இன்ஜினியர். இந்த விளம்பரப் படப்பிடிப்புக்கு உங்களுக்கு குறைந்த நேரமே தேவைப்பட்டது.
இவர்கள் இருவரும் பிபிஇ கிட்களை அணிந்திருந்தார்கள். இவர்கள் வீட்டிற்கு நுழைவதற்கு முன் அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்து சாதனங்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இந்த படப்பிடிப்பில் நான் தகுந்த இடைவெளியேக் கடைப்பிடித்து இருந்தேன்.
இந்த படப்பிடிப்பிற்கு பிறகு நான் புதிய இயல்பு நிலைக்குத் தயாராக இருக்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.