தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தன் வாழ்வில் நேர்ந்த ஆசிட் வீச்சு குறித்து கங்கனாவின் சகோதரி உருக்கமான பதிவு...

தனது இளமைப் பருவத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி சண்டேல், அதனால் தான் பட்ட வேதனையை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

By

Published : Oct 4, 2019, 11:02 AM IST

சகோதரி ரங்கோலி சண்டேலுடன் நடிகை கங்கனா ரணவத்

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி சண்டேல், தன் வாழ்வில் நிகழ்ந்த கொடூரமான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து ட்வீட்டரில் விவரித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணவத். தற்போது மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'தலைவி' படத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில், இவரது சகோதரி ரங்கோலி சண்டேல், சிறு வயதில் ஒருதலைக் காதலால் தன் வாழ்வில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து ட்வீட்டரில் அவர் விவரித்துள்ளார்.

தனது கல்லூரி பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தப் புகைப்படம் எடுத்த சில மணி நேரங்களில் என்னை ஒருதலையாகக் காதலித்த நபர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். நான் மறுப்பு தெரிவித்ததால், அவர் தன்னிடம் இருந்த ஒரு லிட்டர் ஆசிட்டை என் முகம் மீது வீசினார். இதனால் கடும் பாதிப்புக்குள்ளான எனக்கு 54 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

நான் ஆசிட் வீச்சுக்கு ஆளானபோது, எனது தங்கையும் தாக்குதலுக்குள்ளானார். அவரை கிட்டத்தட்ட சாகும் வரை ஏன் அடித்தார்கள்? எனத் தெரியவில்லை.

ஆசிட் வீச்சால் எனது அழகை இழந்தவிட்டதற்கு என் மீது பலரும் வருத்தப்பட்டார்கள். உங்கள் கண்முன்னால் உடல் உறுப்புகள் எரிந்து உருகினால், நமது அழகை பற்றிதான் அக்கறை கொள்வோம். சுமார் ஐந்து ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டபோதிலும் மருத்துவர்களால் எனது காதுகளை சீர் செய்ய இயலவில்லை.

ஆசிட் வீச்சால் ஒரு கண் பார்வையிலும் கோளாறு ஏற்பட்டு, கண்விழி பின்புறத்திரை மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டேன். எனது உடம்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து தோல் துண்டுகளை எடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட மார்பு பகுதிகளில் ஒட்டினார். இதனால் என் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும்போது பல சிக்கல்களை அனுபவித்தேன்.

தற்போதும் கூட என்னால் கழுத்தை சரிவர நீட்ட முடியாது. மேலும், பாதிப்ப ஏற்பட்ட பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் சொத்துவிடலாம் என்று தோன்றுகிறது.

ஆசிட் வீச்சு சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் சில வாரங்களில் விடுதலையாகி வெளியே வந்துவிடுகின்றனர். அவர்கள் சந்தோஷமாக வெளியே நடமாடுவதைப் பார்க்கையில் மனதுக்குள் வலி ஏற்படுகிறது.

இத்துனை கஷ்டங்களிலும் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறந்த நண்பர் போல் எனது கணவர் ஆறுதல் அளிக்கிறார். என் காயங்களை சுத்தப்படுத்துவது, அறுவை சிகிச்சைக்காக பல வருடங்கள் காத்திருந்த தங்கை மற்றும் பெற்றோர் என் வாழ்வில் பெருமூச்சு விடுவதற்கு காரணமாக திகழ்ந்தனர்.

ஆசிட் வீச்சில் ஈடுபடும் படுபாதக செயலை செய்பவர்களுக்கு மரண தண்டனை ஏன் அளிப்பதில்லை? நான் எனது பல்கலைகழகத்தின் முதல் மாணவியாக திகழ்ந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவஷமாக எனது இளமை பருவம் மருத்துவமனை, அறுவை சிகிச்சை என சென்றுவிட்டது. 90 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தும் ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளானோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என பதிவிட்டார்.

இவ்வாறு ரங்கோலி சண்டேல் தன் வாழ்வில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை விவரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details