தமிழ்நாடு

tamil nadu

தொலைக்காட்சி நடிகருடன் காதலில் விழுந்த ஹிருத்திக் ரோஷனின் மாஜி மனைவி?

ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுஸான், தொலைக்காட்சி நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By

Published : Mar 13, 2021, 10:10 PM IST

Published : Mar 13, 2021, 10:10 PM IST

Hrithik Roshan
Hrithik Roshan

பாலிவுட் சூப்பர் ஹீரோ ஹிருத்திக் ரோஷனும், சுஸானும் 2000ஆவது ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர். இவர்களுக்கு ஹிருதன் ரோஷன், ஹ்ரேகான் ரோஷன் என்ற இருமகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் விவகாரத்திற்கு பின் ஹிருத்திக் ரோஷனுடன் தங்கியுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் இவர்களை காண சுஸான், ஹிருத்திக் ரோஷன் வீட்டில் சில காலம் தங்கியிருந்தார். இதனால் இருவர் இடையே மீண்டும் காதல் மலரும் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். ஆனால், சுஸான் தொலைக்காட்சி நடிகரான ஆர்ஸ்லான் கோனி என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இவர்கள், அதன் பின் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details