மும்பை: 5 தேசிய விருதுகளை வென்ற பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பிறந்தநாள் இன்று (ஜன.17) அவரைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.
திரைத்துறையில் கிளாப்பர் பாயாக தனது பயணத்தைத் தொடங்கியவர் ஜாவேத் அக்தர்.
ஜாது எனும் ஜாவேத் அக்தரின் உண்மையான பெயர், அவரது தந்தை எழுதிய 'Lamha lamha kisi jadu ka fasana hoga' என்ற கவிதை வரியில் இருந்து எடுக்கப்பட்டது. ஜாது என்றால் மேஜிக் என்று பொருள்.
தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த ஜாவேத், தனது 8 வயதிலேயே தாயை இழந்தார். ஜாவேத் பிறந்தநாளுக்கு மறுநாளே அவரது தாய் சஃபியா அக்தர் இறந்தது இன்னும் கொடுமை.
உருது கவிஞர் கைஃபி அஸ்மியிடம் உதவியாளராக பணியாற்றிய ஜாவேத், தனது முதல் மனைவி ஹனி இரானியை பிரிந்த பின்பு கைஃபியின் மகள் ஷபானா அஸ்மியை திருமணம் செய்துகொண்டார்.
ஜாவேத் அக்தர் - ஷபானா அஸ்மி 1964ஆம் ஆண்டு மும்பை வந்த ஜாவேத், உணவு, இருப்பிடம் இல்லாமல் தவித்து வந்தார். தெருக்களிலும், மரத்தடியிலும் படுத்துறங்கி காலம் தள்ளிய அவருக்கு கமல் அம்ரோஹி ஸ்டுடியோவில் இடம் கிடைத்தது. ஜாவேத்துக்கு கிளாப்பர் பாய் பணியை அம்ரோஹி வழங்கினார்.
சர்ஹாதி லூட்டேரா படப்பிடிப்பின்போது ஜாவேத்தை சந்தித்த சலிம் கான். ஜாவேத்தை அப்படத்துக்கு வசனகர்த்தாவாக மாற்றினார்.
ஜாவேத் அக்தர் - சலிம் கான் 5 தேசிய விருதுகளை வென்ற ஜாவேத், தனது லாவா கவிதை தொகுப்புக்காக 2013ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.