தமிழ்நாடு

tamil nadu

ஃபர்கான் அக்தரின் ‘டூஃபான்’ வெளியாகும் புதிய தேதி அறிவிப்பு

டோங்ரி பகுதியில் அடியாளாக சுற்றித் திரியும் ஒருவன் எப்படி குத்துச்சண்டை வீரனாக மாறுகிறான் என்பதே இதன் கதைச்சுருக்கம். ரித்தேஷ் சித்வானியின் எக்சல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

By

Published : Jun 16, 2021, 3:01 PM IST

Published : Jun 16, 2021, 3:01 PM IST

Farhan Akhtar's Toofaan gets new release date
Farhan Akhtar's Toofaan gets new release date

மும்பை: ஃபர்கான் அக்தர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூஃபான்’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஃபர்கான் அக்தர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூஃபான்’. கரோனா நெருக்கடி காரணமாக மே 21ஆம் தேதியாக இருந்த இதன் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் ஜூலை 16ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் நாயகன் ஃபர்கான் அக்தர், பணிவு, அன்பு, அர்ப்பணிப்புடன் சண்டையிடும் நம் தேச மக்களுக்கு, ‘டூஃபான்’ வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Farhan Akhtar's Toofaan gets new release date

குத்துச்சண்டையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. டோங்ரி பகுதியில் அடியாளாக சுற்றித் திரியும் ஒருவன் எப்படி குத்துச்சண்டை வீரனாக மாறுகிறான் என்பதே இதன் கதைச்சுருக்கம். ரித்தேஷ் சித்வானியின் எக்சல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details