தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 2, 2020, 3:41 PM IST

ETV Bharat / sitara

மகள்களை ஓவியம் போல் மாற்றிய இயக்குநர் - ஏன் தெரியுமா?

பழங்கால ஓவியத்தை மறுஉருவாக்கம் செய்து தனது மகள்களை பொம்மை போல் அலங்கரித்த பாலிவுட் இயக்குநர் ஃபராகான், அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிரிந்துள்ளார்.

Farah khan in lockdown
Farah khan latest news

மும்பை: பள்ளியில் கொடுத்த வீட்டு பாடத்துக்காக தனது மகளை பழங்கால ஓவியத்தின் தோற்றத்துக்கு மாற்றியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ஃபராகான். பாலிவுட் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி இயக்குநராக புரோமோட் ஆகியிருக்கும் ஃபராகான்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள்கள் திவா, அன்யா ஆகிய இருவரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், ஓவியத்தை மறுஉருவாக்கும் செய்யுமாறு எனது மகள்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களது அம்மாவாகிய நான் சிகையலங்காரம், ஒப்பனை, உடையலங்காரம், புகைப்படக்கலைஞர் என, அனைத்து தெரிந்தவராக இருக்கிறேன்.

மகள்களை ஓவியம் போல் மாற்றிய இயக்குநர் ஃபராகான்

நான் சொல்வது சரிதானே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக, தனது குழந்தைகள் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார் ஃபராகான். அதோடு மட்டுமில்லாமல் தனக்கு தெரிந்த வித்தைகள் அனைத்தையும் ஊரடங்குக்கு இடையே வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details