'மைனா’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்று ராணா டகுபதி நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காடன்’.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. விலங்குகள், பழங்குடியினரைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனிதனைக் குறித்த இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தெலுங்கில் 'ஆரண்யா', இந்தியில் 'ஹாத்தி மேரி சாத்தி' என்ற பெயரில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது.
உலக தொற்று நோயான கரானோ காரணமாக தற்போது இப்படத்தை வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரசிகர்களின் உடல் நலம் எங்களும் முக்கியம். தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். உங்களை விரைவில் நாங்கள் திரையரங்களில் சந்திப்போம். இப்போதைய சூழல்நிலையைக் கருத்தில் கொண்டு காடன் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்திவைக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'காடன்' படத்துக்காக 30 கிலோ எடை குறைத்த ராணா