இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை கொடூரமாகத் தாக்கி வருகிறது. நாள்தோறும் அதிகளவில் பாதிக்கப்பட்டும் இறந்தும் வருகின்றனர். இந்தியா படும் சிரமங்களைப் பார்த்து பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. மேலும் பல பிரபலங்களும் தொண்டு நிறுவனங்களும் கரோனா நிவாரண நிதியை வழங்குகின்றன.
அந்த வகையில், கெட்டோ எனும் சமூக வலைதளத்தின் மூலம் #InThisTogether என்ற நிதி திரட்டும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தொடங்கினர். கரோனா நிவாரண நிதியாக முதலில் ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக தங்கள் பங்களிப்பாக ரூ. 2 கோடியை வழங்கினர். அதன் பின் ரூ. 11 கோடியை நிவாரண நிதியாக திரட்ட நட்சத்திர தம்பதி முடிவு செய்தது.