தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மயிரோடு தொலையும் 'பாலாவின்' அடையாளம் - வெளியான ட்ரெய்லர்!

முடி உதிர்வால் பாதிக்கப்படும் இளைஞன் ஒருவன் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்த நடைமுறையுடன் கொண்டு 'பாலா' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

bala

By

Published : Oct 10, 2019, 8:27 PM IST

தேசிய விருது வென்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியுள்ள 'பாலா' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இதனையடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த 'ஆர்டிக்கல் 15', 'டிரீம் கேர்ள்', 'பதாய் ஹோ' உள்ளிட்ட படங்கள் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது.

இந்நிலையில், இயக்குநர் அமர் கெளசிக் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாலா'. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா பால்டிங் என்னும் நோயால் பாதிக்கப்பட்ட பாலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூமி பெட்னேகர், யாமி கௌதம், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தினேஷ் விஜயன்-ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முடி உதிரும் பால்டிங் நோயால் பாதிக்கப்பட்ட பாலா, தனது முடியை திரும்ப வளரச்செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சியை யதார்த்தமாகவும் நகைச்சுவையுடனும் இப்படத்தில் காட்சிபடுத்தியுள்ளதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. இப்படம் நவம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் வாசிங்க: ‘ஆர்ட்டிகள் 15’ - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்?

ABOUT THE AUTHOR

...view details