அக்ஷய் குமார், வாணி கபூர் நடிப்பில் ஸ்பை த்ரில்லராக வெளியாக இருக்கும் திரைப்படம் 'பெல் பாட்டம்'. கரோனா தொற்று காரணமாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்த பின்னர் வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் எம். திவாரி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் கதை 1980களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார் உளவாளி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
படப்பிடிப்புக்காக லாரா தத்தா, ஹுமா குரேஷி உள்பட பலர் பிரிட்டன் செல்ல இருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு முடிந்தவுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க...'எதையும் பிளான் பண்ணி பண்ணணும்'- படப்பிடிப்புக்குத் தயாராகும் அக்ஷய் குமாரின் 'பெல் பாட்டம்'