தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

'லாலாலா லால லாலாலா..’ ஹம்மிங் செய்தால் இனி யூடியூப்பில் பாடல் கேட்கலாம் - வந்தாச்சு புது அப்டேட்!

Humming used to search songs in YouTube: யூடியூப் பக்கத்தில் இனி பாடல்களை ஹம்மிங் செய்தால் அந்த பாடலைக் கேட்பது தொடர்பான வசதி அப்டேட் செய்யப்பட உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 6:19 PM IST

ஹைதராபாத்:பிரபல வீடியோ தேடுதளமாக யூடியூப் பக்கம் அறியப்படுகிறது. இது பிரபல தேடுதளமான கூகுளின் (Google) ஒரு அங்கம் ஆகும். இதில் பாடல்கள், படங்கள், சார்ட்ஸ் (shorts) உள்ளிட்ட பல அம்சங்கள் இருந்து வருகின்றன. அதிலும், இதில் நாம் ஒரு பாடலையோ அல்லது ஒரு திரைப்படத்தையோ அல்லது தேவையான ஒரு வீடியோ பதிவையோ தேட விரும்பினால், நம்முடைய மொபைலில் இருக்கும் கீபேட் மூலம் டைப் செய்து தேடி வருகிறோம்.

அவ்வாறு இல்லை என்றால், குரல் தேடுதல் (Voice Search) மூலம் தேவையானவற்றை தேடுவோம். இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், நமக்கு அதற்கான பதில்கள் அடுத்தடுத்து கிடைக்கப் பெறும். இந்த நிலையில், யூடியூப் பக்கத்தில் தேடுவதற்கு புதிய ஒரு வசதியை யூடியூப் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அடிப்படையில், பாடலின் வரிகளை ஹம்மிங் செய்தாலோ அல்லது கேட்க விரும்பும் பாடலை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதன் வாயிலாக இசைப்பதன் மூலம் அதற்கான பதில்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க:சென்னை டூ பெங்களூரு இனி 30 நிமிடத்தில் செல்லலாம்.. சென்னை ஐஐடியின் 'ஹைப்பர்லூப்' திட்டம்

உதாரணமாக, நீங்கள் ‘தென்றல் வந்து தீண்டும்போது..’ என்ற பாடலைக் கேட்க நினைத்தால், ‘தன்னனன தானனான தான னானனா..’ என ஹம்மிங் செய்தால் அதற்கான பதில்கள் கிடைக்கும். இதற்காக குறைந்தபட்சம் 3 நொடிகள் ஹம்மிங் அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடலை இசைக்க வேண்டும். இதன் பிறகு, அதன் பதில்களும், வழக்கமான அதன் உடன் தொடர்புடைய பதில்களும் நமக்கு கிடைக்கும்.

மேலும், இது தொடர்பாக யூடியூப் சோதனை அம்சங்கள் மற்றும் பரிசோதனைகள் என்ற பக்கத்தில், “ஹம்மிங் மற்றும் பதிவு செய்யப்பட்ட பாடல்களை இசைத்து உள்ளீடுகளைக் கொடுத்து விரும்பிய பாடலை கேட்கும் விதமான அம்சத்தை நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம்” என தெரிவித்து உள்ளது.

இந்த பரிசோதனை முழுவதுமாக நிறைவு பெற்று உரிய அனுமதிக்கு பிறகு யூடியூப் பக்கத்தில் புதிய அப்டேட்டாக இணைந்தால் அதனை நாம் பயன்படுத்தலாம். மேலும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட சோதனைகளை யூடியூப்பில் செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. இதன் மூலம் வீடியோ பதிவுகள் அதன் உடன் தொடர்புடைய பதிவுகளின் உதவியுடனும் கிடைக்கப் பெறும்.

இதையும் படிங்க:சிக்கினால் ரூ.500 கோடி அபராதம் - நாளை தாக்கலாகிறது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா..! சிறப்பம்சங்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details