டெல்லி: கைபேசி சந்தையில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தைத் தக்கவைத்து கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நிறுவனம், தற்போது ஸ்மார்ட் கைக்கடிகார சந்தையிலும் அடியெடுத்து வைக்க உள்ளது.
ETV Bharat / science-and-technology
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் காலடி எடுத்துவைக்கும் ஒன்பிளஸ்
சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கிளையான ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை தனது தகவல் சாதங்களின் பட்டியலில் இணைக்க உள்ளது. கூகுள் வியர் தளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் 2019ஆம் ஆண்டிலிருந்தே ஸ்மார்ட் கைக்கடிகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய இன்ஃபோகாம் மீடியா டெவலப்மென்ட் ஆணையத்தின் வலைத்தள பக்கத்தில் W301GB மாடல் எண் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரம் குறித்த தகவல் பட்டியலிடப்பட்டது.
இந்த W301GB ரக எண் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஒன்பிளஸ்நிறுவன தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் கைக்கடிகாரம் என்று தெரியவந்துள்ளது. மேலும், கூகுள் வியர் இயங்குதளம், ஸ்நாப்டிராகன் 4100 மென்பொருள் ஆகியவை இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.