தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

Huawei Mate XS: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மார்ச் 2020-ல் அறிமுகம்

ஹுவாவே மேட் எக்ஸ் எஸ் மார்ச் 2020-ல் அறிமுகமாகும் என்று சீன நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் அசல் மேட் எக்ஸைப் போன்று மடிக்கும் வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

#Huawei Mate XS

By

Published : Oct 24, 2019, 5:35 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சீனாவில் ஹுவாவேமேட் எக்ஸ் (Mate X) ஸ்மார்ட்போன் வெளியீட்டு விழாவில், அடுத்ததாக வெளியுடவுள்ள ஹுவாவே மேட் எக்ஸ் எஸ் அறிமுகத்தை சிறப்பிக்கும் ஒரு ஸ்லைடை திரையில் காண்பித்தனர். இந்த ஸ்மார்ட்போன் ஹுவாவே மேட் எக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள ஹைசிலிகான் கிரின் 980 SoC எனப்படும் செயலியின் அடுத்த பதிப்பான ஹுவாவே மேட் எக்ஸ் எஸ்-ல் ஹைசிலிகான் கிரின் 990 SoC எனப்படும் செயலி பொருத்தப்பட்டுள்ளது மேலும் ஒருங்கிணைந்த 5ஜி மோடமை உள்ளடக்கியது.

புதிய ஹுவாவே மேட் எக்ஸ் எஸ் கிரின் 990 SoC ஐ உறுதிப்படுத்துவதைத் தவிர மேட் எக்ஸ் எஸ்ஸின் எந்த முக்கிய அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் ஹுவாவே குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்மார்ட்போன் மேட் எக்ஸ் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.

சீனாவில் நடந்த Mate X வெளியீட்டில் Huawei Mate XS சுருக்கமாக காட்சிப்படுத்தப்பட்ட ஸ்லைடு

ஆரம்பத்தில் ஹுவாவே சீனாவில் மேட் எக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியது, இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் நடப்பு மாத தொடக்கத்தில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸிக்கு எதிராகப் போட்டியிடுகிறது.

இதையும் படிக்க: #MiMIXAlpha : ‘பட்டனும் இல்லை, பிடிக்க இடமும் இல்லை’ - அதிரடி காட்டும் மீ மிக்ஸ்!

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details