இந்தியாவில் கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் மி-தொலைக்காட்சி அறிமுகம் செய்ததும், இவை இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மெல்லிய சட்டங்கள் உள்ள தொலைக்காட்சியாக வடிவமைத்துள்ளது. இந்த புதிய ஈ-ரக மற்றும் மி ஆர்ட் ரக தொலைக்காட்சிகள் 32” முதல் 65” அளவில் வரவுள்ளது. இந்த மி தொலைக்காட்சி குறித்த தகவல்கள் சீனாவின் சமூக வலைத்தளம் ஒன்றில் கடந்த ஜூன் மாதமே சியோமியின் தலைமை செயல் அதிகாரி லீ ஜன்னால் வெளியிடப்பட்டது. இந்த மி தொலைக்காட்சியில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஈ ரக தொலைக்காட்சிகள் அனைத்திலுமே சியோமியின் பாட்ச்வால் இயங்குதளம் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு. மேலும் டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி டியூனிங், 16w ஒலி வெளிப்பாடு, 2ஜிபி ரேம், 8 ஜிபி சேமிப்பு வசதி, 1.5GHz பிராஸசர் மற்றும் வைஃபை ஈதர்நெட் ஆகிய அம்சங்களும் உண்டு. மேலும் இந்த ரக தொலைக்காட்சிகளில் புளூடூத் ரிமேட்டும் உண்டு. சியோமி நிறுவனம் மேலும் மி ஆர்ட் தொலைக்காட்சிகளையும், 65” திரை அளவில் வெளியிட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியில் 1.8GHz பிராஸசர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு திறன், 24W ஒலி வெளிப்பாடு, பாட்ச்வால் இயங்குதளம் ஆகியவை கொண்டவை என்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.