ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளிடம் பிரிவினைவாதம், மக்களின் உணர்வு மற்றும் இந்திய சார்பு அரசியல் ஆகியவற்றுக்கு இடையேயான தவறான புரிதல்கள் குறைந்து, முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பது பாஜக 'குப்கர் கும்பல்' என்று அழைத்ததன் மூலம் தெரிகிறது.
இந்திய பாராளுமன்றத்தால் 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் கூட்டணிக்கான குப்கர் ஒப்பந்தம் (PAGD) என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குப்கர் கூட்டணியின் முக்கிய கட்சிகள் இதற்கு முன்பு ஒருவர் பின் ஒருவராக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க அல்லது அவர்கள் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பின்னர் NDAவின் ஒரு பகுதியாக மாறினர்.
அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தான் வாஜ்பாயின் ஆட்சியின் போது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக மாற பிராந்தியத்தில் பாஜகவுடன் முதன்முதலில் கூட்டணி வைத்த கட்சியாகும். பின்னர் ஜம்மு-காஷ்மீரில் அரசமைக்க முப்தியின் பிடிபி கட்சி மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவை பெற்றது.
ஒருவரை ஒருவர் தோற்கடிக்க பாஜகவின் ஆதரவை நாடிய என்சி மற்றும் பிடிபி ஆகிய இருகட்சிகளுமே, இப்போது அதே கட்சிக்கு எதிராக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒன்றுபட்டுள்ளன.
பிரதேசத்தில் முக்கிய சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீரின் பத்து மாவட்டங்களில் பாஜகவிற்கு சட்டப்பேரவை இடங்கள் இல்லை என்றாலும், முந்தைய மாநில சட்டப்பேரவையில் ‘குப்கர் கும்பலின்’ தொகுதிகள் மூலம் பிராந்தியத்தில் நுழைய முயற்சிக்கிறது. ஜம்மு பகுதி மக்கள் பாஜகவுடனும் மற்ற அரசியல் கட்சிகளுடனும் ஓரளவு நடுநிலையாக இருக்க முடிவு செய்துள்ளனர்.
இப்பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதன் தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தது வரை ஜம்மு-காஷ்மீரில் பாஜகவிற்கு அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருந்தது.
முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வரை, பாஜகவின் கைப்பாவையான ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் கட்டளையின் கீழ் அரசாங்கத்தின் விருப்பப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
புதிய விஷயங்களில், ஆகஸ்ட் 5 முடிவிற்குப் பிறகு நிறுத்தப்பட்ட ஒரு அரசியல் செயல்முறையைத் தொடங்குவது ஒன்றே சின்ஹாவிடம் எஞ்சியிருந்த ஒரே பணி.
சின்ஹாவை ஆளுநராக நியமித்ததன் பின்னால் இருந்த முக்கிய நோக்கம் பிராந்தியத்தில் அரசியல் நடவடிக்கைகளை மீட்டெடுப்பதாகும். 4Gஐ மீண்டும் வழங்குவது போன்ற சில முக்கிய கோரிக்கைகளைத் தவிர சிறையில் இருந்து ஒமர் மற்றும் அவரது தந்தை பாரூக் அப்துல்லா விடுதலையானது மக்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்துல்லாவை கட்டுப்படுத்துவது என்பது ஒருபோதும் நிறைவேறாது என்று அவர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் அப்துல்லாவின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதில் மனோஜ் சின்ஹாவின் செயல்பாடு, டெல்லியில் தலைமையை தைரியப்படுத்தி புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான ஜம்மு கஷ்மீர் தொடர்புடைய சில முக்கிய அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய தூண்டியது.
பாஜக சில தவறான கணக்கீடுகளின் பின்னணியை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதால், குப்கர் கூட்டணிக்கு எதிராக பாஜக தலைவர்கள் அமித் ஷா, ஜிதேந்திர சிங் முதல் சம்பிட் பத்ரா வரை தன்னிச்சையாக தொடர்ச்சியான அறிக்கைகள் விட தூண்டியது. மெஹபூபா முப்தி சிறையில் இருந்து பல மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பின்னர் அளித்த அறிக்கையில் அரசியல் மாற்றம் தெரிகிறது.
370ஆவது பிரிவு மீண்டும் கொண்டு வரப்படும் வரை, தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் வேறு எந்தக் கொடியையும் (மூவர்ண கொடி என அர்த்தம் கொள்க) ஏற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் கீழ்மட்ட அளவிலான தேர்தல்களை நடத்துவதற்கான முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்தது.
பிராந்திய கட்சிகள் தேர்தல்களில் இருந்து விலகி இருப்பதாகவும், கிராமம் மற்றும் தொகுதி மட்டத்தில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான மொத்த இடத்தையும் விட்டுகொடுத்து விடுவார்கள் என்றும் பாஜக கருதியிருக்கலாம். DDC (மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்கள்) திருத்தத்தின் மூலம் அவர்கள் ஏற்கனவே யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத்தை அதிகாரமில்லாமல் ஆக்கியிருந்தனர்.
ஏனெனில் அவர்கள் NC மற்றும் PDP தலைவர்கள் சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் பிராந்தியக் கட்சிகளை விட தங்களின் பலம் வலுவாக இருக்க, யூனியன் பிரதேசமான ஜம்மு கஷ்மீரில் கீழ்மட்ட மட்டத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைத்தது.
பாஜகவிற்கு எரிச்சலூட்டும் விதத்தில், குப்கர் கூட்டணி பாஜகவுக்கு எதிராக கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதாக ஒரு ஆச்சரியமான நடவடிக்கையை அறிவித்தது, இதனை எதிர்பார்க்காத பாஜக, இதனால் அவர்கள் மீது கோபமடைந்தது. குப்கர் கூட்டணி மொத்த இடத்தையும் கிட்டத்தட்ட கையகப்படுத்தியுள்ளது.
அது முக்கிய பிரச்னையோ அல்லது பிரிவினைவாதமாகவோ அல்லது மக்கள் உணர்வை ஈர்க்கும் விஷயங்களாகவோ இருக்கலாம். மேலும் இது ஹுரியத்தின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ளது. பிரிவினைவாதத்தின் முக்கியமானவரும் ஹுரியத்தில் ஒரு அங்கத்தின் தலைவருமான மஸ்ரத் ஆலம் பட்-டின் விடுதலை விரைவில் நடைபெறலாம் என தெரிகிறது.
பட்-டின் விடுதலை பாஜகவுக்கு பயனளிக்குமா, மேலும் அவரது விடுதலையை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான முன்னேற்றமாக இருக்கும். குப்கர் கூட்டணியின் திட்டங்களில் இருந்து மக்கள் விலகிச்செல்லும்படியான ஒரு பொருத்தமான நபராக பட் இருந்தால் அவரின் விடுதலையை அரசாங்கம் எளிதாக்கும்.
குப்கர் அமைப்பை தேசிய விரோத அமைப்பு என்ற பாஜகவின் கருத்துக்கு காங்கிரஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், காங்கிரஸ் தலைமை பின்னர் கூட்டணியில் இருந்து விலகி விட்டது என்பது பிராந்திய அரசியல் வளர்ச்சியில் முரண்பாடாகத் தெரிகிறது.