செல்போன் சந்தையில் ஐபோன்களின் விற்பனை சரிவை சந்திப்பதாக தெரிகிறது. இந்த காரணங்களுக்காக ஐபோன் விலை குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிக விலைக்கு விற்கப்படுவதும், அதிகரித்துவிட்ட போட்டி நிறுவனங்களுமே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், சந்தையில் ஆப்பிள் ஐபோன்களின் விலையில் இன்னும் சில தினங்களில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறைகிறது ஆப்பிள் ஐ-போன்களின் விலை!
ஆப்பிள் ஐபோன்களின் விலையை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த விலை குறைப்பு ஐபோன்கள் விற்பனை ஆகும் சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தவிர மற்ற நாடுகளில் இந்த விலை குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது இருப்பினும் எத்தனை நாடுகளில் இது அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் இரண்டு ஐபோன்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது வெடித்த சம்பவமும் நடந்தது, இதுவும் கூட விலை குறைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.