தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2019, 5:08 PM IST

ETV Bharat / lifestyle

இந்தியர்களின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன்!

இந்தியர்கள் தாங்கள் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலேயே செலவிடுவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Indians smartphone addiction
Indians smartphone addiction

இந்தியர்கள் ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது குறித்து சைபர்மீடியா ஆய்வு மையம் விவோ நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

மூன்றில் ஒரு பங்கை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன்

இந்தியர்கள் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 1,800 மணி நேரத்தை அதாவது 75 நாள்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதிலேயே செலவிடுகிறார்கள். அதாவது, விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு.

மேலும், ஆய்வில் பங்கேற்வர்களில் சரிபாதி பேர் மொபைல்கள் இல்லாமல்தங்களால்இருக்க முடியாது என்றும் ஒருமுறைகூட சமூக வலைதளங்களை ஆப் செய்ய முயற்சித்ததில்லை என்றும் கூறியுள்ளனர்.

30 விழுக்காட்டினர் இப்படியா?

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாவதால், சுமார் 30 விழுக்காட்டினர், தங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் மாதத்தில் ஒரு சில முறையே சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு பங்கு மக்கள், தங்களால் மொபைலை பயன்படுத்தாமல் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாது என்றும் மூன்றில் ஐந்து பேர், நமது வாழ்விலிருந்த மொபைலை பிரித்தால் அது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவும் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:நீல வண்ண வானை அழகாக்கும் சூரிய கிரகணம்: தெரிந்து கொள்வோம்!

ABOUT THE AUTHOR

...view details