இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பல்வேறு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் நிரம்பியுள்ளது. ரெட்மி, ரியல்மி, விவோ, ஓப்போ ஆகிய நிறுவனங்களின் ஆதிகத்தால் மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சிறப்பாக இருந்தாலும் அவை மக்களிடம் சென்று சேருவதில்லை. இதனால் மற்ற நிறுவனங்கள் அதிக வசதிகளை குறைந்த விலைக்கு தர கடுமையாக முயல்கின்றன.
அந்த வரிசையில் தற்போது TECNO நிறுவனமும் இணைந்துள்ளது. TECNO நிறுவனம் SPARK 5 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. பின்புறம் நான்கு கேமரா, 6.6 இன்ச் டிஸ்பிளே, முன்புறம் பன்ச் ஹோல் கேமரா என அட்டகாசமான வசதிகளுடன் குறைந்த விலையில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு மக்களிடையே எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
TECNO SPARK 5 சிறப்பம்சங்கள்
- 6.60 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்
- பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + AI கேமரா
- முன்புறம் 8 மெகாபிக்சல் பன்ச் ஹோல் கேமரா
- 5000mah பேட்டரி
- மெமரி கார்ட் மூலம் 256 ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்தலாம்
- ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் HiOS 6.1 இயங்குதளம்