வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகளில் சில ஆண்டுகளுக்கு "எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்" என்கிற பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது இந்த செயலிகளின் மூலம் நாம் அனுப்பும் செய்தியை பெறுபவரைத் தவிர அந்நிறுவனம் உள்ளிட்ட வேறு யாரும் படிக்க முடியாது. இதன் காரணமாக பயங்கரவாதம் எளிதில் பரவும் என்று ஒரு சாரார் குற்றஞ்சாட்டினாலும் இது பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று வாட்ஸ் அப், டெலிகிராம் நிறுவனங்கள் தெரிவித்தனர்.
வாட்ஸ் அப், டெலிகிராம் பாதுகாப்பில்லை -ஆராய்ச்சியில் பகீர் முடிவுகள்
கலிபோர்னியா: வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் பாதுகாப்பு சிறப்பாக இல்லை என சைமென்டெக் என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சைமென்டெக் என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகளில் அனுப்பப்படும் வீடியோ, புகைப்படங்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் பயனாளியின் மொபைல் ஃபோனிலேயே சேமிக்கப்படுகிறது. அதன்படி வேறு செயலிகளுக்கும் இதே போல வீடியோக்களையும் புகைப்படங்களையும் மொபைல்ஃபோனில் சேமிக்க அனுமதியளித்தால் அதன் மூலம் பயனாளிகள் அனுப்பும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் அவர்களுக்குத் தெரியாமலேயே மாற்றி ஹேக் செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.