தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2020, 7:16 PM IST

ETV Bharat / lifestyle

உலக அளவில் முடங்கிய கூகுள் சேவைகள் : சர்வருக்கு என்ன ஆனது?

உலகம் முழுவதும் இன்று காலை ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் முடங்கியதை அடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.

கூகுள் சேவைகள் உலகளவில் முடக்கம்
கூகுள் சேவைகள் உலகளவில் முடக்கம்

”ஜிமெயில் இன்று (ஆக. 20) காலை முதலே சரியாக வேலை செய்யவில்லை”. இதுதான் சமூக வலைதளங்களில் இன்று பலரும் முன்வைத்து வந்த பதிவு. ’தி டவுன் டிடெக்டர் போர்டல்’ என்னும் இணைய சேவைகள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் தனது பக்கத்தில் ஜிமெயில் உள்ளிட்ட கூகுள்சேவைகளின் இன்றைய பாதிப்பு குறித்து பதிவிட்டுள்ளது.

ஜிமெயிலின்25 விழுக்காடு பயன்பாட்டாளர்களுக்கு லாகின் செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் குறித்து இன்னும் எதுவும் தெரிய வரவில்லை. ஆனால் சில ஐடி வல்லுநர்கள், கூகுள் செயலி பக்கத்தில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகதான் இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஜிமெயில், கூகுள்ட்ரைவ் ஆகியவற்றில் பிரச்னைகள் இருப்பது குறித்து கூகுள் நிறுவனத்துக்கும் புகார் சென்றுள்ளது. அவர்கள் இந்த பிரச்னைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளனர். 11 விழுக்காடு பேர் தங்களுக்கு புதிய மின்னஞ்சல்கள் வருவதில்லை என்று புகாரளித்துள்ளனர்.

கூகுள் சேவைகள் உலகளவில் முடக்கம்

ஜிமெயிலில் எந்த ஒரு இணைப்பையும் இணைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ட்விட்டரில் பலரும் ஜிமெயில்பிரச்னை குறித்து தொடர்ந்து எழுதி வருகின்றனர். அவர்கள் என்ற ஹேஷ்டேக்குகளில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details