ஒரு காணொலியை கண்டுகளிக்கும்போது தவறுதலாக இடைநிறுத்தமோ, தாவி செல்லவோ செய்யாதவாறு திரைப்பூட்டு அம்சத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் பயனர்கள் காணொலிகளை கண்டுகளிக்கும் போது எந்தவிதமான இடையூறும் இருக்காது. இந்த வசதியை ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டும் தற்போது அனுபவிக்க முடியும்.
ஆப்பிள் ஐ-ஓஎஸ் இயங்குதளத்திற்கு இந்த அம்சத்தை நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. இந்த திரைப்பூட்டு அம்சத்தை செயல்படுத்தும்போது, திரையில் உள்ள அனைத்து விருப்பத் தேர்வுகளும் செயலற்றதாகி விடும்.
கண்ணை விட துல்லியமான படக்கருவி வெளியிடவுள்ள சாம்சங்
அதாவது, திரைப்பூட்டு தேர்வு மட்டும் இத்தருணத்தில் உயிர்ப்புடன் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அதனை தொட்டு ஆன் / ஆஃப் செய்யலாம். இந்த அம்சத்தை அனைவரும் காணும் மூன்றாம் தர செயலிகளான எம்.எக்ஸ் பிளேயர், வி.எல்.சி மீடியா பிளேயரில் கண்டிருக்க முடியும்.