டெல்லி: நம் முனங்கலைக் கொண்டு அதற்கேற்ற பாடலைக் கண்டறியும் திறனை கூகுள் மேம்படுத்தியுள்ளது.
பாடலை முனங்கினால் போதும் - அதற்கான மொத்த தகவலையும் கூகுள் தந்துவிடும்
கூகுள் உதவியாளர் (கூகுள் அசிஸ்டென்ட்) மக்களுக்குப் பெரும் பயனுள்ள தொழில்நுட்பமாகும். தட்டச்சு தெரியாதவர்களும் இதன் உதவியை நாட முடியும். தற்போது மேம்படுத்தப்பட்ட இதன் தளத்தில், நம் முனங்கலைக் கண்டறிந்து அதற்கான பாடல் குறித்த முழு விவரங்களை நமக்குத் தருகிறது, இந்த தொழில்நுட்ப உதவியாளர்.
google voice search
இணையத்தை உலாவ 'முனங்குங்கள்'
- 10 முதன் 15 விநாடிகள் வரை உங்களுக்கு விவரம் தேவைப்படும் பாடம் குறித்து முனங்குங்கள்
- இது இல்லாமல், 'ஹே கூகுள்' எனச் சொல்லி, இந்தப் பாடல் என்ன? என்று கேளுங்கள்
- உடனடியாக அந்தப் பாடலை முனங்கி காட்டுங்கள்
- இதனை கூகுள் எண்களாக கணக்கிட்டு, தங்களின் பிக் டேட்டாவைத் தேடும்.
- கணிக்கப்பட்ட எண் அலைவரிசைகள் சரிபார்க்கப்பட்டு, நாம் நினைத்த தகவலை அப்படியே கொடுத்துவிடும்