டெல்லி:ஆப்பிள் நிறுவனம் தங்களது ஆப் ஸ்டோரில் உள்ள சிறந்த 15 செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆண்டின் சிறந்த 15 ஆப்பிள் செயலிகள்: நிறுவனம் அறிவிப்பு!
ஆப்பிள் ஆப் ஸ்டோர் 2020ஆம் ஆண்டின் 15 சிறந்த செயலிகளை தெரிவுசெய்துள்ளது. மனித வாழ்வில் அவசியமானதாக நிரூபிக்கப்பட்ட 15 செயலிகளை அந்நிறுவனம் அங்கீகரித்துள்ளதாக அதன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, ஆண்ட்ரஸ் கனெல்லா உருவாக்கிய ஐபோன் பயன்பாடான ஆப்பிள் 'வேக்அவுட்' முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொற்று நோய் தாக்கத்தின் போது, வேலைகளை எளிதாக்கிய ஜூம் செயலியும் பட்டியலில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது.
ஐபோன், ஐபேட் விளையாட்டுகளின் வரிசையில் மிஹோயோ, ரையாட் கேம்ஸின் ரன்னெடெரா சிறந்த 15 செயலிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு விநியோகப் பிரிவுக்குச் சொந்தமான டிஸ்னி+ ஓடிடி செயலியும் பட்டியலில் உள்ளது.