தமிழ்நாடு

tamil nadu

2 ஜிபி டேட்டா ஃபைல்களை அனுப்பும் வசதி - அதிரடி காட்டும் டெலிகிராம்

By

Published : Jul 27, 2020, 11:58 PM IST

டெலிகிராம் அதன் பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ள புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சுயவிவரக் காணொலிகள், அருகிலுள்ள நபர்களை கண்டறிதல், 2 ஜிபி டேட்டா கோப்புகளை அனுப்பும் வசதி ஆகியவை அடங்கும்.

telegram update
telegram update

டெல்லி: வாட்ஸ்அப் செயலிக்கு நேரடி போட்டியாளரான டெலிகிராம், தன் பயனர்களைக் கவரும் வண்ணம் புதிய அம்சங்களை தனது புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் சுயவிவரக் காணொலிகள், அருகிலுள்ள நபர்களைக் கண்டறிதல், 2 ஜிபி டேட்டா கோப்புகளை அனுப்பும் வசதி ஆகியவை அடங்கும். வாட்ஸ்அப் செயலி பயனர்கள், 16 முதல் 100 மெகா பைட் (MB) அளவிலான கோப்புகளை மட்டும் தான் அனுப்ப முடியும். ஆனால், டெலிகிராம் பல மைல் பாய்ந்து தனது சேவையை 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம் என மெருகேற்றியுள்ளது.

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

அதேபோல சுயவிவரக் காணொலிகள், அருகில் இருக்கும் நண்பர்களைக் கண்டறிந்து அணுகுவது என தனது தரத்தை அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

டெலிகிராம் புதிய பதிப்பின் அம்சங்கள்

ABOUT THE AUTHOR

...view details